`ஓ' வகை ரத்தம் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும்- கருத்தரங்கில் தகவல்
`ஓ' வகை ரத்தம் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது
அமெரிக்கன் கல்லூரியின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் துறையின் சார்பில் உலக கொசு நாள் அனுசரிக்கப்பட்டது. மாணவர்கள் கல்லூரியில் உள்ள மாணவர்கள் கூடும் இடங்களில் கொசு வராமல் தடுக்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை வைத்திருந்தனர். கருத்தரங்கில் விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ், கொசு பரப்பும் டெங்கு, மலேரியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்கள் பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார். அவர் பேசும்போது கொசுக்கள் குண்டானவர்களையும் 'ஓ' ரத்த வகை உள்ளவர்களையும் கடிக்கும் என்றார். மேலும் நம்முடைய சுற்றுப்புறத்தில் கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசுக்கள் எண்ணிக்கை குறையும் என்றார். நிகழ்வில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் யோகேஷ் டொமினிக் மற்றும் அமீர்கான் ஒருங்கிணைத்தனர்.