கடலூர், விருத்தாசலத்தில்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர், விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-21 18:45 GMT


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி 4 மணி நேரம் வேலை வழங்கி, முழு ஊதியம் ரூ.281 வழங்க வேண்டும்.

இத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு அரிநாராயணன் தலைமை தாங்கினார். வீரமணி, ரவி, ஜெயபால், சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஆளவந்தார் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

இதில் நிர்வாகிகள் ஜெயலட்சுமி, அப்துல்ஹமீது, வெங்கடேசன், கனகராஜ், தட்சணாமூர்த்தி, வசந்தி, சிவக்கொழுந்து, செந்தில்குமார், அரசப்பன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் பாலக்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அடைக்கலம், சக்திவேல், சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட துணைத் தலைவர் தர்மலிங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்