இ-சேவை மையம் தொடங்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் இ- சேவை மையம் அமைக்க புதிய உரிமம் பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தினை மாற்றுத் திறனாளிகள் https://tnesevai.tn.gov.in மற்றும் https://tnega.tn.gov.in இணைய தளங்களில் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.