மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
விழுப்புரம்
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்றுவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.1,500-ஆக இம்மாதம் 1-ந் முதல் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.