மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

கொடைரோட்டில் சாலையை சீரமைக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-12 18:45 GMT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கொடைரோடு தபால் நிலையம் முன்பு சாலை மறியல் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் பகத்சிங் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது, கொடைரோட்டில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு வழியாக மாவுத்தன்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து இருப்பதாகவும், அதனை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முக லட்சுமி, பேபி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 80 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கொடைரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மகாலில் அவர்களை அடைத்தனர். அதன்பின்பு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்