காவல் பணியை தான் முடிக்கிறேன், மக்கள் பணி தொடரும் - பிரிவு உபசார விழாவில் டி.ஜி.பி ரவி பேச்சு
காவல் பணியை தான் முடிக்கிறேன், மக்கள் பணி தொடரும் என பிரிவு உபசார விழாவில் டி.ஜி.பி ரவி கூறினார்.
சென்னை,
தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி இன்று ஓய்வு பெறுவதையடுத்து சென்னை ராஜரத்தினம் அரங்கில் காவல்துறை சார்பில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் டி.ஜி.பி ரவி ஓய்வு பிரிவு உபசார விழாவில் பேசியதாவது:-
காவல்துறையில் இருப்பவர்கள் அதிகாரிகள் அல்ல, அலுவலர்கள். அதிகாரிகள் என்றால் அதிகாரம் செலுத்துபவர்கள். கெஜெட்டில் கூட அதிகாரி என்ற வார்த்தை இல்லை. நாம் மக்களின் அலுவலர்கள்.
காவலர்கள் உடல்நிலையை நன்றாக வைத்திருந்தால் தான், மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும். அரசாங்கம் வாய்ப்பு கொடுத்த போதெல்லாம் நான் மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். காவல் பணியை தான் முடிக்கிறேன், மக்கள் பணி தொடரும் என்றார்.
முன்னதாக பேசிய காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு,
ரவியும், நானும் ஒரே கல்லூரியுல் படித்தோம், விடாமுயற்சி கொண்டவர். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர். ரவி ஓய்வு பெற்றாலும் காவல்துறையினருக்கு தொடர்ந்து அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றார்.
பிரிவு உபச்சார விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.