பொங்கல் பொருட்களுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள்

முதுகுளத்தூர் அருகே பொங்கல் பொருட்களுடன் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-04-11 18:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பொங்கல் பொருட்களை முக்கிய வீதி வழியாக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளும் செய்தனர். அதன் பின்பு அம்மனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா ஏற்பாட்டினை மருத்துவ குல சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்