வாழை நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்

மணவாளக்குறிச்சி அருகே சாலைைய சீரமைக்க கோரி ெபாதுமக்கள் வாழை நட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-19 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே சாலைைய சீரமைக்க கோரி ெபாதுமக்கள் வாழை நட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

சாலையில் கொட்டப்பட்ட களிமண்

மணவாளக்குறிச்சி அருகே பெரியகுளம் ஏலா உள்ளது. இந்த ஏலாவுக்கு அருகில் உள்ள பெரியகுளத்தில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த குளத்தின் கிழக்கு கரை வழியாக ஒரு சாலை செல்கிறது.

இந்த சாலை வழியாக விவசாயிகள் ஏலா நடவுக்கு தேவையான நாற்று, உரம் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்கிறார்கள். மேலும் அறுவடைக்கு பின்பு நெல் மணிகள், வைக்கோல்கள் இந்த சாலை வழியாக ஏற்றி செல்கிறார்கள். மேலும் இந்த சாலையில் பூவாடி என்ற கிராமம் உள்ளது. இங்கு 70 வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியாக மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை போன்ற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் பெரியகுளத்தின் கிழக்கு கரையை சீரமைக்கும் பணி நடந்தது. இதற்காக குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட களிமண் இந்த சாலை போடப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் களிமண் பரப்பப்பட்டுள்ளது.

நூதன போராட்டம்

தற்போது குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இந்த சாலை ஏர் வைத்து உழுதது போல் சகதி காடாக காட்சி அளிக்கிறது. இதனால் வயலுக்கு செல்ல முடியாமல் விவசாயிகளும், பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்களும் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

அந்த வழியாக செல்லும் பலர் சகதியில் வழுக்கி விழுந்து படுகாயத்துடன் எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் வாழை நட்டு நூதன போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'பெரியகுளம் ஏலாவில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெற்கதிர் முதிர்ந்து உள்ளது. அடுத்த மாதம் அறுவடை செய்யப்பட உள்ளது. இந்த சாலை சகதிகாடாக உள்ளதால் அறுவடை செய்யும் நெல் மற்றும் வைக்கோல்களை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விவசாயிகள், மாணவர்கள் நலன் கருதி இந்த சாலையை போர்கால அடிப்படையில் உடனே சீரமைக்க வேண்டும். இல்லையெனில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்