முறத்தில் வைத்து மனு கொடுத்த மக்கள்
போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறத்தில் வைத்து மக்கள் மனு கொடுத்தனர்.
போளூர்
போளூர் அருகே ஆர்.குண்ணத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பி.கணேசன் (வயது 57).
இவர் 4 நாட்களுக்கு முன்பு போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட இளநிலை உதவியாளரை அணுகி உள்ளார்.
அப்பேது இளநிலை உதவியாளர் உங்கள் ஊரில் முறம் அகலம் உள்ள நோட்டை கொண்டு வா என்று மரியாதை இல்லாமல் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கணேசன் இன்று கிராம மக்கள் சிலருடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முறத்தில் வைத்து மனு அளித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.