சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-07 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் கபீர் புரஸ்கார் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விருது

2022-ம் ஆண்டுக்கான 'கபீர் புரஸ்கார் விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தகுதியானவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தவர்கள் தகுதி உடையவர் ஆவர். மேலும் ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரியும் போது, அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்

இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விவர குறிப்புகளை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மற்றும் http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாள் 14.12.2022 ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி - 1, போன் : 0461 2321149 என்ற முகவரியில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்