குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்த மக்கள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்த மக்கள்

Update: 2022-06-20 18:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காந்திநகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் தேவிபட்டினம் காந்திநகர் பகுதியில் கடந்த சில வருடங்களாகவே குடிதண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகின்றது.

இதனிடையே தேவிபட்டினம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக காலி குடங்களுடன் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து காலி குடங்களை தலையில் வைத்தபடி ஏராளமான பெண்கள் ஊர்வலமாக வந்தனர். மனு கொடுப்பதற்கு 5 பேரை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதைதொடர்ந்து மக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். காலி குடங்களுடன் பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்