சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம், திருகருக்காவூர், குமரகோட்டம், வேட்டங்குடி, புளியந்துறை, வாலங்காடு, பழையாறு சுனாமிநகர், திருமுல்லைவாசல், அரசூர், சிவக்கொல்லை, வேம்படி, வடகால், கீராநல்லூர், குன்னம், காட்டூர் உள்ளிட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கீராநல்லூர் கிராமத்தில் இடியுடன் பெய்த கனமழையால் பள்ளிவாசலின் கோபுரத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்தது. மேலும் சீர்காழி நகரப்பகுதியில் உள்ள பள்ளி வளாகம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது.