மாநகரப் பஸ்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி

மாநகரப் பஸ்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2022-07-05 16:22 GMT

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சிப் பஸ்களில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகரப் பஸ்களில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும். பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்துப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பொதுஇடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்