தண்ணீர்குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதி
டம்ளர் இல்லாததால் தண்ணீர்குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 7 மாடிகளை கொண்டது. அனைத்துத் தளங்களிலும் சிறிய அளவிலான குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ள குடிநீர் குழாய் துருப்பிடித்து மோசமாக உள்ளது. மேலும் டம்ளரும் வைக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாமல் தாகத்துடன் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாய் வைக்கும் இடத்தில் டம்ளர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..