தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
அதிராம்பட்டினம்
தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, சுப்பிரமணியர்கோவில் தெரு, கடற்கரை தெரு ெரயில்வே கேட் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.