சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.