குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள சோதுகுடி கிராமத்தில்15-க்கும் மேற்பட்ட குரங்குகளின் தொல்லையால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலும் பகல் நேரங்களில் குரங்குகள் ஊருக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை தின்று மீதமுள்ள உணவுகளை கீழே கொட்டுகின்றன. கிராம மக்கள் விவசாய வேலைகளுக்கும், 100 நாள் வேலை திட்டத்திற்கும் செல்வதால் குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதற்கு பயப்படுகின்றனர். பெரியவர்கள் குரங்கை விரட்டும் பொழுது அவைகள் கடிக்க துரத்துகின்றன. பெரும்பாலும் ஓட்டு வீடுகளுக்குள் ஓடுகளை பிரித்து கொண்டு புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை நாசப்படுத்துகின்றது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். எனவே வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.