நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

நீடாமங்கலம் நகரில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-23 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் நகரில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய்கள் தொல்லை

நீடாமங்கலம் நகரில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. .தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன.ெரயில் நிலையம் உள்ளது. நீடாமங்கலத்தில் சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.நீடாமங்கலம் நகரில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகிறது. தெருக்களிலும், கடைவீதிகளிலும், ெரயில் நிலையங்களிலும் கூட்டமாக சுற்றித்திரிக்கின்றன.

நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்களையும் விரட்டி சென்று கடித்து வருகிறது.

பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

இந்த நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விரட்டி செல்வதால் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழிகளை கடித்து கொன்று வருகின்றன.

எனவே நீடாமங்கலம் நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்