கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு

Update: 2023-02-20 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்காக கொட்டகை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அகற்றகோரி அப்பகுதிமக்கள் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று இரவு 7 மணி அளவில் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் நிறைமதி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைய செய்தனர். ஆக்கிரமிப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதாக கிராமமக்கள் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்