திமுக சாதி அரசியல் செய்வதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பரப்புரை

சமூக நீதி என திமுக பேருக்கு சொல்லிவிட்டு சாதி அரசியல் செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-06 15:01 GMT

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், விக்கிரவாண்டியின் வடக்குச்சிபாளையம் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;

இது முக்கியமான தேர்தல். திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் எல்லாம் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளனர். 34 அமைச்சர்களில் 25 பேர் இங்கு தான் உள்ளனர். கடையில் காசு கொடுத்து பொருள் வாங்குவது போல் உங்கள் ஓட்டுகளை ரூ.500, 1,000 கொடுத்து வாங்குகிறார்கள்.

தேர்தல் முடிந்து இங்கு இருக்கும் 25 அமைச்சர்களில் ஒருவரையும் பார்க்க முடியாது. இடைத்தேர்தல் என்பது அவர்களுக்கு 15 நாள் கூத்து. சமூக நீதி என திமுக பேருக்கு சொல்லிவிட்டு சாதி அரசியல் செய்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கொடுக்காமல் கஞ்சா, கள்ளச்சாரயம்தான் கொடுக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்களால் எந்த பயனும் இல்லை."

இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்