பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்

பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று முள்ளிப்பாடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.;

Update:2023-08-16 02:07 IST

பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று முள்ளிப்பாடியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தினார்.

கிராமசபை கூட்டம்

சுதந்திர தினவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது கலெக்டர் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டம், பாலித்தீன் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதை ெபாதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

இதையடுத்து கலெக்டர் மரக்கன்று நடவு செய்ததோடு, மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு மரக்கன்றுகள், 10 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், சமூக நல அலுவலர் புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, ஊராட்சி தலைவி மாதவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் மாரியம்மாள், துணை தலைவர் மோகனபிரபு, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சித்திரைக்குளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பழனி ஆர்.டி.ஓ. சரவணன், தாசில்தார் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி துரைராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

எமக்கலாபுரம் ஊராட்சி

சாணார்பட்டி அருகேயுள்ள எமக்கலாபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் சண்முகவேல், ஊராட்சி மன்ற துணை தலைவர் இன்னாசி, ஊராட்சி செயலர் ஷோபனா மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வேம்பார்பட்டி ஊராட்சியில் தலைவர் கந்தசாமி தலைமையில் கிராமசபை கூட்டம் மொட்டயகவுண்டன்பட்டியில் நடந்தது. துணை தலைவர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். சிறப்பு பார்வையாளராக நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஷாஜிதா கலந்துகொண்டார். ஊராட்சி செயலர் கென்னடி வரவு- செலவு ஆண்டறிக்கை வாசித்தார். மேலும் மனைபிரிவுகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்கலாவதி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செங்குறிச்சி

செங்குறிச்சி ஊராட்சியில் சடையம்பட்டி நால்ரோடு சமுதாய கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு செங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கலாராணி முன்னிலை வகித்தார். இதில் பார்வையாளராக சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் சுரேஷ் கலந்து கொண்டார். ஊராட்சி செயலர் லோகநாதன் வரவு- செலவு விவரங்கள் மற்றும் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பாடியூர் ஊராட்சி

வடமதுரை ஊராட்சி ஒன்றியம், பாடியூர் ஊராட்சி கிரியம்பட்டியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதாராணி (வட்டார ஊராட்சி), ஏழுமலையான் (கிராம ஊராட்சி) முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி பொது நிதியின் வரவு-செலவு அறிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.அதன்பின்னர் ஊர் மந்தையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகரச் செயலாளர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமாரி ரவி, துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில்மணி செல்வராஜ், ஊராட்சி செயலர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செந்துறை

செந்துறை ஊராட்சி தலைவர் சவரிமுத்து, பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் தேன்மொழிமுருகன், கோசுகுறிச்சி ஊராட்சி தலைவர் ஷாஜுதாபேகம், குட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள்மணி, சிறுகுடி ஊராட்சி தலைவர் கோகிலவாணி வீரராகவன், சமுத்திராபட்டி ஊராட்சி தலைவர் சேதுஅமராவதி, ஊராளிபட்டி ஊராட்சி தலைவர் தேன்சேகர் தேனம்மாள், பூதகுடி ஊராட்சி தலைவர் பரமசிவம், ந.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகம்மாள் மகாலிங்கம், ஆவிச்சிபட்டி ஊராட்சி தலைவர் துர்கா சங்கீதா ஆகியோர்கள் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

அம்பாத்துரை

அம்பாத்துரை ஊராட்சியில் தலைவர் சேகர், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி தலைவர் ஆறுமுகம், தொப்பம்பட்டியில் கருப்பையா, முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் தலைவர் அந்தோணியம்மாள் அலெக்ஸ், காந்திகிராம ஊராட்சியில் தலைவர் தங்க முனியம்மாள், கலிக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் கோமதி செல்வகுமார், கலிக்கம்பட்டி ஊராட்சியில் தலைவர் கோமதி செல்வகுமார், என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் தலைவர் பாப்பாத்தியம்மாள் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. என்.பஞ்சம்பட்டி, தொப்பம்பட்டி ஆகியவை சிறந்த ஊராட்சிக்கான விருது பெற்றது. அதன் தலைவர்களுக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அ.வெள்ளோடு ஊராட்சியில் கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். சிறந்த ஊராட்சி செயலாளராக சான்றிதழ் பெற்ற ஜெனிபர் கிளாராவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

செம்பட்டி அருகே, ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துணைத் தலைவர் சையது அபுதாஹிர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. அக்கரைப்பட்டி ஊராட்சியில் தலைவர் லட்சுமி சக்திவேல், போடிகாமன்வாடி ஊராட்சியில் தலைவர் நாகலட்சுமி சசிகுமார், பாளையங்கோட்டை ஊராட்சியில் தலைவர் அழகுமலை, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சியில் தலைவர் பாலாஜி, வீரக்கல் ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல், சீவல்சரகு ஊராட்சியில் தலைவர் ராணி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. வக்கம்பட்டியில் ஊராட்சி தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

பித்தளைப்பட்டி

பித்தளைப்பட்டி ஊராட்சியில் தலைவர் மயில்சாமி, பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தலைவர் உலகநாதன், பச்சமலையன்கோட்டை ஊராட்சியில் தலைவர் காளிதாஸ் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

நத்தம் அருகே வேலம்பட்டி ஊராட்சியில் தலைவர் கண்ணன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. புன்னப்பட்டி ஊராட்சியில் தலைவர் ஜெயப்பிரகாஷ், ரெட்டியபட்டி ஊராட்சியில் தலைவர் சாத்திபவுர், பண்ணுவார்பட்டி ஊராட்சியில் தலைவர் ஆண்டிச்சாமி, லிங்கவாடி ஊராட்சியில் தலைவர் அழகிநேரு, முளையூர் ஊராட்சியில் தலைவர் வேலுச்சாமி, செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் தலைவர் சவுந்திரராஜன், சாத்தாம்பாடி ஊராட்சியில் தலைவர் பரமேஸ்வரி முருகன் ஆகியோரின் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையாவுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்