பொதுமக்களிடமிருந்து 308 மனுக்கள்

பொதுமக்களிடமிருந்து 308 மனுக்கள்

Update: 2023-05-26 12:02 GMT

தாராபுரம்

தாராபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ குமரேசன் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் கன்னிவாடி, தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 308 பேர்கள் மனு கொடுத்தனர். அதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஒரு சில மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டது.மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தலைமையிடத்து துணை தாசில்தார் பரமேஷ், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குண்டடம் பகுதியில் 16 வருவாய் கிராமங்களுக்கும், 31ஆம் தேதி (புதன்கிழமை) பொன்னாபுரத்தில் 8 வருவாய் கிராமங்களுக்கும், ஜூன் 1ஆம் தேதி (புதன்கிழமை) சங்கராண்டாம்பாளையத்தில் 9 வருவாய் கிராமங்களுக்கும் நடைபெற உள்ளது.இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளுமாறு தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசன் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்