பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-25 09:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை கோர்ட்டு உத்தரவின் பேரில் அகற்றும் பணிகளில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக மதுராந்தகம் அருகே உள்ள வில்வராயநல்லூர் கிராமத்தில் உள்ள 3.5 ஏக்கர் அரசு நிலத்தில் அவர்களுக்கு பட்டா வழங்க மதுராந்தகம் தாசில்தார் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் தாசில்தாரை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் பகுதியில் உள்ளவர்களுக்கு இங்கு பட்டா வழங்கக்கூடாது எனவும் அவர்கள் இங்கு வந்தால் எங்கள் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இதனால் அவர்களுக்கு இங்கு பட்டா வழங்கக் கூடாது என்று கூறினர். எங்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி கிராம மக்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை தாசில்தார் முன்பு கீழே போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, மதுராந்தகம் தாசில்தார் ராஜேஷ், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்