குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்யக்கோரி ெபாதுமக்கள் மறியல்

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்யக்கோரி ெபாதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-05 17:15 GMT

கலசபாக்கம்

புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நயம்பாடி கிராமத்திற்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர். ஆனால் இது வரை சாலை போடப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.இந்த நியைலில் சாலையை சரி செய்யக்கோரி நயம்பாடி கிராம மக்கள் நேற்று திடீரென திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து, சாலை பணி மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டு 3 மாதம் ஆகிவிட்டது. இருப்பினும் மழை காரணமாக சாலை போடாமல் தள்ளிப் போகிறது. விரைவில் சாலை போடப்படும்'' என்று கூறினார்.

இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்