தரமாக சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்
சீர்காழியில் தரமாக சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி;
சீர்காழியில் தரமாக சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த சாலை
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தேரோடும் வீதிகளான தேர் கீழவீதி, தேர் வடக்கு வீதி, தெற்கு வீதி, தேர் மேல வீதி, உள்ளிட்ட பல்வேறு சாலைகள் தார் சாலைகளாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் தேர் வடக்கு வீதியில் வங்கி முன்பு சாலை பள்ளமாக இருப்பதால் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை உயர்த்தி தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
பொதுமக்கள் போராட்டம்
நேற்று இந்த சாலையில் தார் சாலை அமைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சாலையில் மழை நீர் தேங்காத வகையில் சாலையை உயர்த்தி மீண்டும் தார் சாலை அமைக்க வேண்டும் எனக்கூறி சாலைப் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், நகராட்சி பணி மேற்பரையாளர் விஜயேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அப்போது சாலையை உயர்த்தி சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.