மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-16 20:47 GMT

கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கங்கைகொண்டான் அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்ற ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த காந்தி மனைவி கோமு (வயது 45) என்பதும் அவர் மது பாட்டில்கள் வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் ஆலடிபட்டி பகுதியில் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்த மணிமுத்தாறு செட்டிமேடு பகுதியை சேர்ந்த முருகேஷ் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வீரமாணிக்கப்புரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த பாபு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்