காங்கயம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்்அந்த வாலிபரை கைது செய்தனர்.

காங்கயம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்்அந்த வாலிபரை கைது செய்தனர்.

Update: 2023-06-18 14:22 GMT

காங்கயம்

காங்கயம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்்அந்த வாலிபரை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

காங்கயம் அருகே ஆறுதொழுவு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது47). இவர் வட்டமலையில் உள்ள கருவண்டராயன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் செல்வன் வழக்கம் போல் நேற்று காலை 5.30 மணியளவில் கோவிலுக்கு பூஜைக்காக சென்றுள்ளார். அப்போது கோவில் முன்புறம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கோவில் முன்புற கதவை பார்த்துள்ளார்.

அப்போது கோவில் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வன் உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது கோவில் உள்ளே ஒரு மர்ம ஆசாமி கோவில் கருவறை அருகில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிக்கொண்டு இருந்துள்ளார்.

வாலிபர் கைது

இதை பார்த்த செல்வன் உடனடியாக சத்தம் போட்டார். அந்த மர்ம ஆசாமி கோவில் காம்பவுண்டு சுவரில் ஏறி தப்பி ஓடியுள்ளார். செல்வன் அருகில் இருந்தவர்களின் உதவியோடு அந்த மர்ம ஆசாமியை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரித்ததனர்.

விசாரணையில் அந்த மர்ம ஆசாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வள்ளிநகரை சேர்ந்த ராஜேஷ் (வயது20) என்பதும், அதிகாலை நேரத்தில் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ராஜேசை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1,340-ஐ மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்