மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Update: 2023-07-30 13:24 GMT

திருப்பூர்

திருப்பூர் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. குறிப்பாக மார்க்கெட்டில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதேபோல் நேற்றும் அதிகாலை முதல் மதியம் வரை மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கடல் மீன், அணை மீன் சுமார் 48 டன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளமீன் ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நண்டு ரூ.300, நெத்திலி ரூ.220, அயிலை ரூ.200, மத்தி ரூ.200, சங்கரா ரூ.300, நகரை ரூ.350, கருப்பு பாறை ரூ.400, வெள்ளை பாறை ரூ.500, வாவல் சிறியது ரூ.300, கிழங்கான் ரூ.170, ஊழி ரூ.280, இறால் ரூ.500, முரல் ரூ.400, சாலமன் ரூ.550 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் அணை மீன் வகையை சேர்ந்த கட்லா ரூ.160, ரோகு ரூ.180, விரால் ரூ.450, ஜிலேபி மீன் ரூ.100, பாறை ரூ.120, நெய் மீன் ரூ.100 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. ஒரு சில மீன்களின் விலை அதிகமாக இருந்த போதும் விற்பனை மும்முரமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்