குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்;

Update: 2023-07-30 18:45 GMT

குளச்சல், 

குளச்சல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாலை வேளையில் கடற்கரை வந்து பொழுதை இனிமையாக கழித்து செல்வது வழக்கம். அதன்படி விடுமுறை தினமான நேற்று மாலையில் ஏராளமான பொதுமக்கள் குளச்சல் கடற்கரையில் குவிந்தனர். குறிப்பாக பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். அவர்கள் மணற்பரப்பில் அமர்ந்து கடல் அலையை ரசித்தப்படி பொழுதை போக்கினர். சிறுவர்கள் மணற்பரப்பில் விளையாடி மகிழ்ந்தனர். இதுபோல் குளச்சல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை வேளையில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் குளச்சல் கடற்கரை 'களை' கட்டியது. இதனால் தள்ளு வண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்