கன்னங்குறிச்சி புதுஏரியில் திரண்ட பொதுமக்கள்
கன்னங்குறிச்சி புதுஏரியில் பொதுமக்கள் திரண்டனர்.;
கன்னங்குறிச்சி:-
கன்னங்குறிச்சி புதுஏரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதல் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் குடும்பத்துடன் வரத்தொடங்கினர். அந்த பகுதியில் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்து குவிந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னங்குறிச்சி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். பொதுமக்கள் அதிகமாக இருந்ததினால் திடீர் கடைகள் அமைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி திருவிழா நடைபெறும் இடம் போல் காட்சி அளித்தது.