கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குவிந்த மக்கள்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2022-08-22 16:54 GMT

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் குளிர்ந்த காற்று வீசுவதுடன், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த சீதோஷண நிலை மாற்றத்தால் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களாக குவிந்து வருகின்றனர். வழக்கமாக திங்கட்கிழமை மட்டும் நோயாளிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் வெளி நோயாளிகள் வருகை குறைவாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக காய்ச்சலுக்காக நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

காய்ச்சலுக்கு சிகிச்சை

அவர்களில் பலர் வெளி நோயாளிகளாகவும், சிலர் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கட்கிழமை காலை 8 மணி முதல் நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் ஆண்கள், பெண்கள் அதிகம் பேர் நீண்ட வரிசையில் நின்றனர். டாக்டர்களை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். நேற்று மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சளி, காய்ச்சலுக்காக வந்து சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்