மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த வட மாநிலத்தவர்கள்
10-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வட மாநிலத்தவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து மாமல்லபுரத்திற்கு வந்திருந்தனர்.
செங்கல்பட்டு,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களுக்குப் பிறகு மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
அந்த வகையில் இன்று விடுமுறை நாளையொட்டி, 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வடமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து குடும்பத்தினரோடு மாமல்லபுரத்திற்கு வந்திருந்தனர். அங்குள்ள புராதன சின்னங்களை கண்டு களித்த அவர்கள், அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு கடற்கரையில் ஓய்வெடுத்துச் சென்றனர்.