மக்கள் நேர்காணல் முகாம்

ஏனங்குடியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது

Update: 2022-09-12 18:29 GMT

திட்டச்சேரி;

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி அலுவலகத்தில் ஏனங்குடி, கயத்தூர், புத்தகரம், ஆதலையூர், மாதிரிமங்கலம், திருப்புகலூர் உள்ளிட்ட 6- கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நாகை மண்டல துணை வட்டாச்சியர் கவிதாஸ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, ஏனங்குடி ஊராட்சி தலைவர் ஹாஜாநிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 250-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கட்ராமன், மாரியப்பன், உமா, சுந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்