வெறையூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வெறையூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-03 18:45 GMT

வாணாபுரம்

வெறையூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வெறையூர் அருகே உள்ள பவித்திரம் புதூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ேடார் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டியபோது குடிநீர்க்குழாய் சேதம் அடைந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை.

அதன் காரணமாக பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமான குழாயை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வெறையூர் சப் - இன்ஸ்பெக்டர் தமிழரசு மற்றும் போலீசார் மறியலில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியும் அவர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதனால் சமரசம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்