குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-29 19:38 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மலையடிப்பட்டி 24-வது வார்டு காந்திநகர் பகுதியில் உள்ள தெருக்களில் பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் குறைவான அழுத்தத்தில் தண்ணீர் வருவதோடு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பெண்களுக்கான இலவச அரசு பஸ்கள் நிறுத்துவதில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மலையடிப்பட்டி மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விைரந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்