கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-02 17:38 GMT

ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைலாசகிரி பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்