அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-11 18:18 GMT

புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் விரிவாக்க பகுதிகளில் குடிநீர், சாலை வசதி, கழிவுநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் 1, 3 மற்றும் 4-வது வார்டுகளுக்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியில் விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் இது தொடர்பாக நகராட்சி உறுப்பினர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நரிமேடு, சமத்துவபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று  சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோஷம் எழுப்பி பின் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்