கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கடையம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;
கடையம்:
கடையத்தை அடுத்த ஆசிர்வாதபுரம் அருகே தனியார் எலும்பு அரைவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரகேடு நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆலையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி ஆசிர்வாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் யூனியன் ஆணையாளர் ராஜசேகரனிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.