பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐந்தாம் கட்டளை பஞ்சாயத்தில் சீராக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மனுக்கள் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் கட்டளையூரை சேர்ந்த பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் வந்து குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, வருவாய் ஆய்வாளர் சுந்தர லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.