முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-10-31 19:17 GMT

முக்கூடல்:

முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அங்கு பணியாற்றும் ஒரு செவிலியர் நோயாளிகளை அவதூறாக பேசுவதாக கூறி அவரை இடமாற்றம் செய்ய கோரியும் இந்த போராட்டம் நடந்தது. மருத்துவமனை தரப்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்