சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையால் மக்கள் கடும் அதிருப்தி..!
காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை, சென்னை மாநகராட்சி தமிழில் வெளியிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னைக்கான காலநிலை செயல்திட்ட வரைவு அறிக்கையை, சென்னை மாநகராட்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாளைக்குள் மக்கள் கருத்துக்களை பதிவிடலாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் காலநிலை வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றப்பட்டு உள்ளதால், சாமானிய மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிபிஐஎம், பாமக உள்ளிட்ட கட்சிகளும், வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், தமிழில் அறிக்கையை பதிவேற்றி, கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.