கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி
கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி
வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு, கோடியக்கரை ஆகிய ஊராட்சிகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளில் ரூ.220 கோடியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 2 ஊராட்சிகளுக்கும் மொத்தம் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிநீர் குழாய்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் காலை, மாலை வழங்கி வந்தனர். இந்தநிலையில் கடந்த 9 நாட்களாக கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.