சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி

Update: 2022-09-28 20:30 GMT

தஞ்சை ஜெபமாலைபுரம் அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

தஞ்சை ஜெபமாலைபுரம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கோவிலுக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் பெரிய அளவிலான பள்ளம் உள்ளது. இதில் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தன. இந்த நிலையில் பள்ளத்தில் கிடந்த குப்பைகள் மழைநீருடன் கலந்து நாளடைவில் கழிவுநீராக மாறியது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இந்த கழிவு நீர் பள்ளத்தில் நிரம்பி ரோட்டை ெபருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடந்து செல்பவர்கள் மட்டுமல்லாது வாகனங்களில் செல்வர்களும் ரோட்டில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடும் இடத்தை கடந்து செல்வதற்குள் மிகுந்த அவதிப்படுகிறார்கள்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சாய்பாபா கோவிலுக்கு தஞ்சையில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். அதுவும் மற்ற நாட்களை விட வியாழக்கிழமையில் பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு சென்று வருவார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்கள் ரோட்டில் கழிவு நீர் செல்லும் இடத்தை கடந்து செல்வதற்குள் மிகுந்த மனவேதனை அடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையில் கழிவு நீர் செல்லாத வண்ணம் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கழிவுநீர் தேங்கி உள்ள பள்ளத்தில் நாய், பன்றி, மாடுகள் அடிக்கடி சிக்கித்தவிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையோர பள்ளத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்