பழுதடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பழுதடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
காங்கயம்,
காங்கயம் - கரூர் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த பிரதான தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் காங்கயம் நகரம், கரூர் சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை பழுதடைந்து சாலை ஓரத்தில் மிகப்பெரிய அளவில் பள்ளம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------