டாஸ்மாக் கடை திறக்க ெபாதுமக்கள் எதிர்ப்பு
சிவன்மலையில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று ெபாதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சிவன்மலையில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று ெபாதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கலெக்டரிடம் மனு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சிவன்மலை, சந்தியாநகர், பள்ளக்காட்டுபுதூர் மற்றும் கொல்லம்பாளிக்காடு ஊர்பொதுமக்கள் சாா்பாக கலெக்டரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சிவன்மலை பகுதியில் அமைய இருக்கும் டாஸ்மாக் கடையை சுற்றிலும் அரிசி ஆலைகள், பனியன் நிறுவனங்கள், கருப்பராயன் கோவில், 3 குடிநீர் குழாயடி பம்புகள், எல்லை பிள்ளையார் கோவில் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியாக பெண்கள் அதிகளவில் வேலைக்கு செல்வதோடு, பஸ் வசதி இல்லாத காரணத்தால் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், பி.ஏ.பி. வெள்ளகோவில் மெயின் கால்வாய் இவ்வழியாக செல்வதால் தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
அனுமதிக்க கூடாது
எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.