தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்;
தூத்துக்குடியில் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் ப.திரவியம் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தி.மு.க அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.