ஓய்வூதியதாரர்கள் நேர்காணலை நிறைவு செய்ய வேண்டும்
வருகிற 30-ந் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் நேர்காணலை நிறைவு செய்ய வேண்டும் கலெக்டர் மோகன் வேண்டுகோள்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கருவூலம், சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதுநாள் வரை நேர்காணலை நிறைவு செய்யாத ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்திற்கு நேரில் சென்று நேர்காணலை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள 'இ' சேவை மையம், பொது சேவை மையம் மற்றும் இந்திய அஞ்சல் துறை வங்கியின் மூலமும் வருகிற 30-ந் தேதிக்குள் தங்களின் நேர்காணலை பதிவு செய்யவும். நேர்காணல் செய்ய தவறும்பட்சத்தில் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.