ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதியும் முகாம்
நீடாமங்கலத்தில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதியும் முகாம் நடந்தது
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதியும் முகாம் நடைபெற்றது. நீடாமங்கலம் அஞ்சலக அதிகாரி செந்தில்வேலன் தலைமையில் அஞ்சலக ஊழியர்கள் தமிழக அரசின் ஓய்வூதியம் பெறும் 102 பேருக்கு வாழ்நாள் சான்று பதிவு செய்தனர். நீடாமங்கலம் வட்ட ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் சுரேஷ் பாட்ஷா, தங்கமணி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஓய்வூதியதாரர்களை முகாமில் பங்கேற்க செய்தனர்.