பென்சனர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்

விழுப்புரத்தில் பென்சனர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-11-06 18:22 GMT

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி ஜோதி, மாவட்ட துணை தலைவர் சரவணன் பவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் விவேகானந்தன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் காலதாமதம் இன்றி அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்டார கிளை துணை தலைவர்கள் சக்திவேல், கண்ணன், பாலகிருஷ்ணன், சிவகுருநாதன், செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்