ஓய்வூதியர் தின கருத்தரங்கம்

திருப்பத்தூரில் ஓய்வூதியர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-12-19 17:42 GMT

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஓய்வு ஊதியர்கள் தின கருத்தரங்கம் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராசு தலைமை வகித்தார். ராமகிருஷ்ணன், சேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏ. ஞானசேகரன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் நாதன் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் காசி, பெருமாள், பன்னீர்செல்வம், சி.ஏ.பாண்டியன் செல்வம், உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த பலர் பேசினார்கள். கருத்தரங்கில் தேர்தல் கால வாக்குறுதிக்கேற்ப புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 70 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு 20 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள 67 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க ரேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்